செஞ்சோலை படுகொலை!! -யாழ்.பல்கலையில் 13 ஆவது நினைவேந்தல்-

புதன் ஓகஸ்ட் 14, 2019

சிறிலங்கா விமான படையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறார்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று புதன்கிழமை காலை யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்தது. 

1
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இவ் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. 

2

இதன் போது உயிரிழந்த மாணவிகள் நினைவுகூரப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ் நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்த கொண்டு உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலியை செலுத்தினர்.3