செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்! காவல்துறை குவிப்பு-

செவ்வாய் சனவரி 26, 2021

மத்திய பிஜேபி அரசு கொண்டுவந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் உழவு இயந்திர பேரணி நடத்தி வருகின்றனர், சுமார் 2 லட்சம் உழவு இயதிரங்கள் மூலம் விவசாயிகள் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர். 

குடியரசு தினத்தன்று உழவு இயந்திர பேரணி நடத்த விவசாயிகள் முடிவு செய்திருந்த நிலையில், இந்திய தலைநகர் டெல்லி செங்கோட்டையில், 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர். 

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை செங்கோட்டையை விற்று செல்லப்போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

செங்கோட்டையில் முகப்பு பகுதியில் உள்ள சிறிய கொடிக்கம்பத்தில் விவசாய சங்கங்களின் கொடியும் ஏற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் காவல்துறையினரும் விவசாயிகளுக்கு இடையே நடந்த தல்லுமுள்ளில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

இதனால் செங்கோட்டை சுற்றிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இப்போராட்டத்தால் டெல்லி முழுவதும் பதற்றமான சூழல் நீடிக்கிறது.