சென்னை - ஐதரபாத்: புதிய விமானச் சேவை தொடக்கம்!

புதன் ஓகஸ்ட் 07, 2019

சிங்காரச் சென்னையையும் சுந்தர ஐதராபாத்தையும் ஒரு மணி நேரம் 10 நிமிடங்களுக்குள் இணைக்கும் இடைநில்லா விமானச் சேவை இன்று தொடங்கியது.

 தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐதராபாத் நகருக்கு சென்னையில் இருந்து அன்றாடம் ஆயிரக்கணக்கானவர்கள் செல்கின்றனர். இதேபோல், ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கும் பலர் வந்து செல்கின்றனர்.

புகையிரதம் அல்லது  பேருந்து  மூலம் சென்று வருபவர்கள் சுமார் 12 மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலையில் விமானம் மூலம் சென்றால் சுமார் ஒன்றைரை  மணி நேரத்தில் சென்றடைய முடியும். 
 

இந்நிலையில், சிங்காரச் சென்னையையும் சுந்தர ஐதராபாத்தையும் ஒரு மணி நேரம் 10 நிமிடங்களுக்குள் இணைக்கும் இடைநில்லா விமானச் சேவையை ‘கோ ஏர்’ நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது.

 

கோ ஏர் விமானம்


தினந்தோறும் காலை 11.05 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்படும் (தடம் எண்:503) விமானம் பகல் 12.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும். சென்னையில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் (தடம் எண்:504) விமானம் 1.55 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். 

இன்று முதல் தொடங்கிய கோ ஏர் நிறுவனத்தின் இந்த  புதிய விமானச் சேவைக்கான பயணக் கட்டணமாக 2099 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.