சென்னையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

செவ்வாய் நவம்பர் 26, 2019

சென்னையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நேற்று, சென்னை ராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில்
மேதகு பிரபாகரன் அவர்களின் 65வது பிறந்தநாள் விழா, நள்ளிரவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

se

சிறப்பு அழைப்பாளாராக அறம் பட இயக்குனர் கோபி நயினார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். காவல்துறை அந்த பகுதி முழுவதும் குவிக்கபட்ட நிலையிலும் தோழர்கள் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழாவை சிறப்பாக உற்சாகத்துடன் கொண்டாடினர்,

se

நிகழ்ச்சிக்கு முன்னதாக  தமிழர்களின் மரபு விளையாட்டான சிலம்பம், புலியாட்டம், பறையிசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. இதில் சென்னை மாவட்ட செயலாளர் குமரன், ஜனா விஜய், செந்தில் உள்ள்ட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டன்.
நிகழ்ச்சி இறுதியில் அனைவருக்கும் இட்லியுடன் கறி பரிமாறப்பட்டது.

se

se

se

sr

தந்தை பெரியார் திராவிடர் கழகம்
சென்னை.