சென்றுவா மகனே!

செவ்வாய் அக்டோபர் 29, 2019

உன் பெயர் தெரியாது
உன் உருவம் தெரியாது
இந்த மூன்று நாட்களில்

கோடான கோடி மக்களின் செல்லப்பிள்ளை ஆகினாய்
எங்கள் ஒவொருத்தர் வீடுகளும் இன்று
மரண வீடாகி விட்டது
உன் குரல் கேட்க உன் வருகை பார்க்க
கோடி இதயங்கள் காத்திருந்தன
அத்தனையும் இன்று ஏமாற்றமே
இது காலம் செய்த கோலமா?
சென்றுவா மகனே

கந்தப்பு ஜெயந்தன்