செப்பு தொழிற்சாலையில் திருடியவருக்கு விளக்கமறியல்

புதன் ஜூன் 12, 2019

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சீல் வைக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையின் பூட்டை உடைத்து, அங்கு செப்பு திருடிய ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வெல்லம்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த செப்பு தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.