செவ்ரோன் மாநகரத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவு நாள்!

வியாழன் மே 19, 2022

முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவு நாள் மே 18 பிரான்சில் நேற்றுக் காலை 10.00மணிக்கு செவ்ரோன் மாநகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக செவ்ரோன் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பொதுச்சுடரைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் உயிர்கொடுத்தவர்களின் உறவுகள் உள்ளிட்ட அனைவரும் நினைவுச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் மாநகரமுதல்வர்,துணைமுதல்வர் மற்றும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு நினைவேந்தி உரை ஆற்றியிருந்தனர்.