செய்திகளும் எழும் கேள்விகளும்...?

வெள்ளி சனவரி 24, 2020

செய்தி:- பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு சோறும், தண்ணீரும் கொடுக்காமல் 70 ஆண்டுகளாக அவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றுவதாக மகிந்தானந்த அழுத்கமகே கூறியுள்ளார்.

எழும்கேள்வி:- 70 ஆண்டுகளாக தமிழர்கள் காற்றைக் குடித்தா வாழ்ந்தார்கள்?

                                                       *****************
செய்தி:-தேசிய பொங்கல் விழாவை கோத்தபாயவின் அரசாங்கம் இரத்துச் செய்திருந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் அலுவலகத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது.

எழும்கேள்வி:- தமிழ் வாக்குகளை வளைக்கப் போய் அதிபர் தேர்தலில் தோற்றது போல் பொதுத் தேர்தலும் மண்கவ்வ ஆள் தயாராகி விட்டாரோ?

                                                        *****************
செய்தி:- நீதிபதியைத் தான் மிரட்டியதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஒலிப்பதிவில் உள்ள குரல் தன்னுடையது அல்ல என்று முன்னாள் சிறீலங்கா அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

எழும்கேள்வி:- தமிழீழம் சாத்தியமில்லை என்று தான் கூறிய ஒலிப்பதிவு கசிந்ததும், ‘குரல் என்னுடையது: ஆனால் நான் அப்படிக் கூறவில்லை’ என்று உருத்திரகுமாரன் வழங்கிய செவ்வியைக் கேட்டிருப்பாரோ?

                                                        *****************
செய்தி:- யாழ் நகரின் மையத்தில் பெளத்த கொடியை ஏற்றிய நபர் மனநலம் குன்றியவர் என்று சிறீலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

எழும்கேள்வி:- மனநலம் குன்றியதாகக் கூறப்பட்ட பெளத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தகனம் செய்தது போல் ஏதாவது யாழ் நகர மையத்தில் செய்வதற்கு திட்டமிடுகின்றார்களோ?

                                                            ******************

444
செய்தி:- இரா.சம்பந்தன் இயங்க முடியாத நிலை ஏற்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்க மாவை சேனாதிராஜா முன்வர வேண்டும் என்று சி.வி.கே.சிவஞானம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

எழும்கேள்வி:- ‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப கிடைக்கும்?’ என்ற பிரச்சினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் தொடங்கி விட்டதா?

                                                     *****************
செய்தி:- தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிட்டுவதற்கு சிறீலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மீண்டுமொரு தடவை இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார்.

எழும்கேள்வி:- ஒத்தடம் கொடுப்பதைத் தான் அழுத்தம் கொடுப்
பது என்கிறாரோ?

-தெய்வமகள்-

நன்றி: ஈழமுரசு

111