செய்திகளும் எழும் கேள்விகளும்.....?

புதன் செப்டம்பர் 04, 2019

செய்தி:-   பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

எழும் கேள்வி:- மாமனிதரைப் படுகொலை செய்தவரை விடுவிக்க யாருக்கிந்த அவசரம்?                                                             

                                                                           *****************
செய்தி:-  நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானத்தில் 40 சதவீதம் தமிழர்களால் அனுப்பப்படுகின்றது என்று வடக்குமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் தெரிவித்தார்.

எழும் கேள்வி:- இன்னும் 10 வீதம் தமிழரை நாட்டைவிட்டு இடம்
பெயர வைத்தால் 50 வீதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றாரோ..?
                                                                         *****************
செய்தி:- இலங்கையின் அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர், யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- வயோதிபர்கள் மட்டும் என்ன நம்பிக்கையா வைத்திருக்கின்றார்கள்..?
                                                                       *****************
செய்தி:-  அண்மைக் காலமாக பல வழிகளிலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை, மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- எப்படி மீட்டெடுக்கப் போகின்றீர்கள்..? எல்லாம் வாய்ச்சவடால் தானோ..?
                                                                      *****************
செய்தி:-  மோடியை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்தியா பயணிக்கவுள்ளனர்.

எழும் கேள்வி:- 13ம் திருத்தக் குண்டுச் சட்டிக்குள் மீண்டும் குதிரை ஓடப்போகின்றார்களோ..?
                                                                       *****************
செய்தி:- கூட்டமைப்பு - மைத்திரிபால சிறீசேன சந்திப்பில் இணக்கம் எட்டப்படவில்லை.

எழும் கேள்வி:- பேரம் படியவில்லையோ..?
                                                                      *****************
செய்தி:-  தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான உலகளாவிய தரப்படுத்தலில் சிறீலங்காவிற்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.

எழும் கேள்வி:- காணாமல்போனவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்காமலே 4வது இடம் கிடைத்ததா..?
                                                                     *****************
செய்தி:-  ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே தனது நோக்கம் என சிறீலங்கா அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- உங்கள் கொள்கைக்கும் சம்பந்தரின் கொள்கைக்கும் எந்தவித முரண்பாடும் இல்லைப்போல் தெரிகின்றதே..?
                                                                    *****************
செய்தி:-  பயங்கரவாதிகளிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகளை பாராட்டி சர்வதேச காவல்துறையான இன்ரர்போல், சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

எழும் கேள்வி:- சிறீலங்காவைக் கெளரவிப்பதே இப்போது சர்வதேசத்தின் வேலையாகிப் போய்விட்டதோ..?
                                                                   *****************
செய்தி:-  30 வருடகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்தபோது, இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில், 90 சதவீதமான காணிகள், உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

எழும் கேள்வி:- வேலிக்கு ஓணான் சாட்சியா..?

நன்றி: ஈழமுரசு