செய்திகளும் எழும் கேள்விகளும்.....?

புதன் செப்டம்பர் 18, 2019

செய்தி:- இரண்டாம் உலகப் போரின்போது தங்கள் நாட்டுப் படையினர் போலந்து மக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்காக ஜேர்மனி மன்னிப்பு கோரியது.

எழும் கேள்வி:- தமிழ் மக்களுக்கு தங்கள் நாட்டுப் படையினர் இழைத்த கொடுமைகளுக்காக சிறீலங்கா, தமிழீழத்திடம் மன்னிப்புக் கோரும் நாள் என்று வருமோ..?
                                                                   *****************
செய்தி:- நாட்டின் தேசிய கடன் பிரச்சினையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போவதில்லை என சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

எழும் கேள்வி:- இலங்கைத் தீவையும், நாட்டிலுள்ள மக்களையும் சேர்த்து விற்றால் கூட கடனை அடைக்கமுடியாத நிலை இருக்கும்போது, இது எப்படிச் சாத்தியமோ..?
                                                                 *****************
செய்தி:- இந்தியாவின் நம்பகமான கூட்டாளி ரஷ்யா என இந்தியப் பிரதமர் மோடி ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகரில் பேசும் போது கூறினார்.
எழும் கேள்வி:- அப்போ அமெரிக்கா..?
                                                                *****************
செய்தி:- வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெளத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

எழும் கேள்வி:- இலங்கை பெளத்த, சிங்கள நாடு என்ற பெரும் குரல் ஒலிக்கத் தொடங்கி 10 ஆண்டுகளாகியும் உங்களுக்குக் கேட்கவில்லையா..?
                                                              *****************
செய்தி:- தென்னிலங்கையில் தேசிய தலைவர்களெனக் கூறிக் கொள்வோர், பெரும்பான்மையின மக்களை தவறாக வழி நடத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- இப்பதான் சம்பந்தன் இதனைக் கண்டுபிடித்துள்ளாரோ..?
                                                              *****************
செய்தி:- சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு எந்த எல்லைக்கும் சென்று உதவத் தயாராக இருக்கின்றோம் என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஹீட் அஹ்மட் ஹஸ்மத் தெரிவித்தார்.

எழும் கேள்வி:- இந்திய எல்லைக்கு உங்களால் போகமுடியுமா..?
                                                            *****************
செய்தி:- இலங்கையில் வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை. தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர் என சிறீலங்கா மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

எழும் கேள்வி:- வடக்கிலும் தெற்கிலும் இந்தக் கொலைகளைச் செய்தது தாங்கள் தான் என்பது சம்பிக்க ரணவக்கவுக்கு மறந்துபோய்விட்டதா..?
                                                              *****************
செய்தி:- பலாலி விமான நிலையத்தினூடாக, யாழ் -இந்தியாவுக்கிடையிலான விமான சேவைகள் ஒக்டோபர் 16ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறீலங்கா சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எழும் கேள்வி:- யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தின் உக்கிர அழிப்புத் தாக்குதல் தோடங்கிய 32வது ஆண்டு நினைவிலா..?
                                                           *****************
செய்தி:- மத வாழ்க்கை தேவையில்லை என்ற எண்ணம் மக்களிடம் பரவி வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- சிலரைச் சில நாள் ஏமாற்றலாம். பலரைப் பல நாள் ஏமாற்ற முடியுமா..?

-தெய்வமகள்-

நன்றி: ஈழமுரசு