செய்திகளும் எழும் கேள்விகளும்...?

புதன் அக்டோபர் 02, 2019

செய்தி:- நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் பொறுப்பை மக்கள் எமக்கு தந்துள்ளனர். அந்த பொறுப்பினை       நாம் நிதானமாக கையாளுவோம். சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

எழும் கேள்வி:- எப்போ தந்தார்கள், எப்படித் தந்தார்கள்...?
                                                                                                 *****************
செய்தி:- இந்து தலங்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:-  மாவை சொன்னால் கேட்டுவிடுவார்களோ..?
                                                                                                  *****************
செய்தி:- மாத்தறை - பெரலபனாதர நகரில் வைத்து, வெள்ளை வானில் கடத்தில் செய்யப்பட்டிருந்த கூட்டுறவுச் சங்க ஊழியர், அத்துருகிரிய பிரதேசத்திலுள்ள இரகசிய இடமொன்றிலிருந்து கடந்த 20ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

எழும் கேள்வி:- கோத்தபாய பதவிக்கு வரமுன்னரே வெள்ளை வான் வந்துவிட்டதா..?
                                                                                                *****************
செய்தி:- ஈரானிடமிருந்து 2012ம் ஆண்டில் பெற்றுக்கொண்ட பெற்றோலிய வளத்தின் பெறுமதியான 250 மில்லியன் அமெரிக்க டொலரை மீளச் செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதற்குப் பதிலாக ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்து அக் கடன் தொகையை ஈடுசெய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்
திருக்கிறது.

எழும் கேள்வி:- அப்போ தேயிலை பறிப்பவர்களுக்கு ஊதியத்தை எப்படிக் கொடுக்கப்போகின்றார்களோ..?
                                                                                             *****************
செய்தி:- காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாதாந்த கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாதாந்த கொடுப்பனவாக  6000 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

எழும் கேள்வி:- கொடுப்பனவை வழங்கி உறவுகளின் வாயை அடைக்கப்போகின்றார்களோ..?
                                                                                            *****************
செய்தி:- தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எழும் கேள்வி:- தமிழ் மக்களை வைத்துப் பேரம் பேசத் தயாராகிவிட்டாரோ..?
                                                                                           *****************
செய்தி:-முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த வாரம் இலங்கைக்கு அமைதி வேண்டி விசேட பிரார்த்தனை நிகழ்வு ஒன்று இரவிரவாக இடம்பெற்றுள்ளது.

எழும் கேள்வி:- முள்ளிவாய்க்கால் எப்படி அமைதி கொள்ளும்..?
                                                                                           *****************
செய்தி:- ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் சம்பந்தன் விக்கினேஸ்வரன் போன்ற தமிழ் தலைவர்களுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் ஏனைய தமிழ் கட்சிகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி, சிறீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் கூறுகின்றனர்.

எழும் கேள்வி:- கேள்வி கூடினால் விலை கூடுமே..? தமிழ்க் கட்சிகளுக்கு நல்ல வியாபாரமாக இருக்குமோ..?
 

-தெய்வமகள்-

நன்றி: ஈழமுரசு