செய்திகளும் எழும் கேள்விகளும்...?

வியாழன் அக்டோபர் 31, 2019

செய்தி:- சிங்கள மொழி எழுத்தாளர்களின் இலக்கிய நூல்களை தமிழ் மொழிக்கும், தமிழ் மொழி நூல்களை சிங்கள மொழிக்கும் மொழிபெயர்த்து, நூல் நிலையங்கள் மற்றும் சுவடிகள் சபைகள் மூலம் வெளியிடுவதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காக் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

எழும் கேள்வி:- மகவம்சம் போன்ற பொய்ப் புனைவுகளை தமிழ் மக்கள் மீது திணிக்கப்போகின்றார்களோ..?

                                                                             *****************
செய்தி:- ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் யாழ். மாவட்டத்தில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 51 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் வீதிகளை புனரமைக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எழும் கேள்வி:- இதற்காக வாங்கிய கடன் கட்டி முடிக்கும் வரை போட்ட வீதிகள் இருக்குமா..?

                                                                             *****************
செய்தி:- சுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறைமையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் ஜனநாயக நாடுகள் சிறீலங்காவைப் பாராட்டியுள்ளதாக நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் Stef  Blok தெரிவித்துள்ளார்.                                                                                       

எழும் கேள்வி:- உங்கள் பாராட்டுக்களுக்கு எல்லையே இல்லையா..?

                                                                               *****************

செய்தி:- நிலவுக்கு அனுப்பிய விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது

எழும் கேள்வி:- நிலவிற்கு அனுப்பியது முகவரி மாறி செவ்வாய்க்குப் போயிருக்குமோ..?

                                                                           *****************
செய்தி:- கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபன, வெளியீட்டில் சீனத் தூதுவரும் பங்கேற்பு

எழும் கேள்வி:- இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு..?

                                                                         *****************
செய்தி:- ஜனாதிபதி தேர்தலுக்காக தன்னுடன் விவாதமொன்றுக்கு வருமாறு சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

எழும் கேள்வி:- அதுதான் வரமாட்டார் என்று தெரிகின்றதே, பிறகெதற்கு..?

                                                                                  *****************
செய்தி:- கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்பதுதான் நம்முன் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி என யாழ் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

எழும் கேள்வி:- இதுவென்ன கேள்வி..? சுமந்திரன் அறிந்தால் கோபப்படமாட்டாரா..?

                                                                                 *****************
செய்தி:- கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் விடுதலைப் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து சிறீலங்கா விசேட அதிரடிப்படையினரால் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எழும் கேள்வி:- முன்னர் குண்டு போட்டு மண்ணைச் சிதைத்தார்கள், இப்போது குண்டு தேடி மண்ணைச் சிதைக்கின்றார்களோ..?

-தெய்வமகள்-

நன்றி: ஈழமுரசு