செய்திகளும் எழும் கேள்விகளும்...?

வெள்ளி நவம்பர் 15, 2019

செய்தி:- வன்னிக்கான சிறீலங்கா இனப்படுகொலை இராணுவத்தின் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தனவினால் 30 செயற்கை உறுப்புக்கள் தமிழ் மக்களுக்கு வன்னியில் வழங்கப்பட்டன.

எழும் கேள்வி:- சொந்தக் கால்களை பறித்துவிட்டு பொய்க் கால்களை வழங்கினார்களோ..?

                                                                *****************
செய்தி:- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருதிக்கு 120 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

எழும் கேள்வி:- திறக்கப்பட்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் அபிவிருத்தியா..?

                                                               *****************
செய்தி:- சர்வதேச அளவில் செய்தியாளர்கள் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் தண்டிக்கப்படவில்லை என்று யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும் கேள்வி:-  இதனைச் செய்தியாகப்போடும் ஊடகவியலாளர்களைத் தண்டிப்பார்களோ..?

                                                           *****************
செய்தி:- தமிழர் தாயகம் முழுவதும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக பிரமாண்ட கூட்டங்களை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்.

111

எழும் கேள்வி:- எங்கு செருப்படி வாங்குவார்களோ..?

111

*****************
செய்தி:- கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எழும் கேள்வி:- கணவன் குடிப்பதாக விவாகரத்துக்கோரிய காலம் போய், இப்போது கணவன் குளிப்பதில்லை என்பதற்கும் விவாகரத்தா..?

                                                         *****************
செய்தி:- இரகசிய கலந்துரையாடலின் பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ரெலோ தீர்மானித்தது.?

எழும் கேள்வி:- என்ன முடிவெடுப்பீர்கள் என்று உலகுக்கே தெரிந்தபிறகு, எதற்காக இரகசியக் கூட்டமாம்..?

                                                   *****************
செய்தி:- 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர்  தடுத்து வைக்கப்பட்ட கன் சைட் முகாமை சல்லடை போட்டு வைத்திய பகுப்பாய்வுக் குழு தேடியது.

எழும் கேள்வி:- கொன்றதும் அவர்கள், தேடுவதும் அவர்கள், நீதி கிடைக்குமா..? 

                                                     *****************
செய்தி:- தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியானமுடிவைத்தான் எடுத்து மக்களுக்கு அறிவித்துள்ளது எமக்குள்ள கடமையை நாங்கள் சரியாகச் செய்துள்ளோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிறாஜா தெரிவித்தார்.

எழும் கேள்வி:- எடுத்தது சரியான முடிவா என்று காலமெல்லவா பதில் சொல்லவேணும்? நீங்களே சொன்னால் எப்படி?

                                                        *****************

-தெய்வமகள்-

நன்றி: ஈழமுரசு