சஹ்ரானின் நெருங்கிய சகா ரியாஸ் அபூபக்கர் கைது!

செவ்வாய் ஏப்ரல் 30, 2019

 இலங்கை உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் குண்டுத்  தாக்குதல்களை நடத்திய  தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர்  சஹ்ரானின் நெருங்கிய சகா  எனச் சொல்லப்படும் ரியாஸ் அபூபக்கர் என்பவர் இந்தியாவின் கேரளாவில் பாலக்காடு எனும் இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சஹ்ரானுடன் நேரடித் தொடர்பை கொண்டிருந்த இவர் அபூ துஜானா என்ற  ஐ .எஸ் பெயரை கொண்டிருந்தவர் .

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இலங்கை குண்டுவெடிப்பு மற்றும் இந்தியாவின் பல இடங்களில் நடத்தப்படவிருந்த தாக்குதல்கள் குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளதாக என்.ஐ.ஏ என்ற இந்திய தேசிய புலனாய்வுப் முகவர் தெரிவித்துள்ளது.