சிஐடியின் புதிய பணிப்பாளராக நிசாந்த டி சொய்ஸா

சனி அக்டோபர் 17, 2020

 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளரராக சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சர்(SSP) நிசாந்த டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை  தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதி காவல் துறை  மா அதிபர் நுவான் வெதசிங்க மேல் மாகாணத்துக்கான பதில் பிரதி காவல் துறை  மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.