சீமான் மீது தேசத்துரோக வழக்கு!!

சனி மே 09, 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்திருந்த சமயத்தில்,கோவை ஆத்துப்பாலத்தில் பிப்ரவரி 22ம் தேதி இஸ்லாமிய கூட்டமைப்பு நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசும்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக சாடினார். மத்திய அரசு மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்த போராட்டத்தில் பேசிய சீமான் மீது,கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் இப்போது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசத்துரோகம், விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.