சீமானுக்கு அழைப்பாணை!

சனி சனவரி 11, 2020

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த சீமானை ஜனவரி 21-ந் திகதி நேரில் ஆஜராக சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்தை தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மீது தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றம்  , அரசு வக்கீல் கவுரி அசோகன் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயருக் கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசிய சீமானை அவதூறு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, சீமான் வருகிற 21-ந் திகதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.