சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று! பெய்ஜிங்கில் ஊரடங்கு!

வெள்ளி சனவரி 22, 2021

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் ஊரடங்கை அமல்படுத்தியது சீன அரசு.

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. சீனாவின் ஊகானில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலக நாடுகளிலும் பரவிப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் சீனாவில் விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் சிஜின்பிங் கொரோனாவுக்கு எதிரான போரில் சீனா வெற்றிபெற்றதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் பெய்ஜிங்கில் டாக்சிங் என்னுமிடத்தில் நாள்தோறும் புதிதாகப் பலருக்கு கொரோனா பரவியுள்ளது . இந்நிலையில் பரவலைத் தடுக்கப் பெய்ஜிங்கின் பல பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.