சீனாவில் மருத்துவத் துறையில் முதல் உயிரிழப்பு!

சனி சனவரி 25, 2020

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது ஒரு தொற்று நோய். இந்து வைரஸ் நோய் தாக்கி இதுவரை 41 பேர்  உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 237 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவிய முதல் நகரமான வுஹான் நகரம் முற்றிலும் முடங்கி போயுள்ளது. யாரும் மற்ற நகரங்களுக்கோ, மற்ற நகரத்தில் இருந்து வுஹானுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும் தீவிர சிகிச்சை டாக்டர்களால் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஸின்ஹுவா ஆஸ்பத்திரி டாக்டரையும் இந்த வைரஸ் தாக்கியது.  அவர் பெயர் லியாங் வுடோங். வயது 62.  இந்த ஆஸ்பத்திரியில் அவர் மூத்த டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அறுவை சிகிச்சை நிபுணராக வேலை பார்த்து வந்த அவரை,  கடந்த வாரமே  கொரோனா வைரஸ் தாக்கியது. அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டநிலையில் 9 நாள் போராடியும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணம் அடைந்தார் என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் மருத்துவத் துறையில் முதல் உயிரிழப்பாக இது கருதப்படுகிறது. கொரோனா வைரசுக்கு மருந்துகள் இதுவரை எதுவும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.