சீனாவில் விபத்தில் 13 பேர் பலி!

ஞாயிறு பெப்ரவரி 10, 2019

சீனாவின் கிழக்கு பகுதியில் இன்று 23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய சம்பவத்திலும் மற்றொரு சாலை விபத்திலும் சிக்கிய 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீனாவின் சந்திர புத்தாண்டு விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற லட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பிக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக வந்த 23 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்மீது ஒன்றாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல், குயிஸோவ் மாகாணத்தின் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு மினி பஸ் காரின் மீது மோதிய விபத்தில் 8 பேர் பலியாகினர். அவசரமாக தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பி செல்லும் நோக்கத்தில் பனி உறைந்திருக்கும் சாலைகளில் வாகன ஓட்டிகள் மிதமிஞ்சிய வேகத்தில் சென்றதால் இந்த விபத்துகள் நேர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.