சீனி உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி விதிப்பு!

வெள்ளி மே 22, 2020

இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தகரத்திலடைக்கப்பட்ட மீன், பேரீச்சம்பழம், பருப்பு, சீனி, வெள்ளைப் பூண்டு உள்ளிட்ட பொருட்களுக்கே இவ்வாறு வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோடம்பழம், எலுமிச்சை, திராட்சை மற்றும் அப்பிள் ஆகியவற்றுக்கான தீர்வைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

அத்துடன் யோகட், செத்தல் மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றுக்கான வரிகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படவுள்ளன.

கொரோனா தொற்றுக் காரணமாக அண்மையில் பருப்பு மற்றும் தகரத்திலடைக்கப்பட்ட மீன், முட்டை ஆகியவற்றின் விலைகள் பிரதமரின் ஆலோசனையின் பேரில் குறைக்கப்பட்டிருந்தன.

எனினும் தற்போது அவற்றின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அத்தியவசியப் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது