சிகை அலங்பரிப்பு நிலையம் சென்ற 125 பேர் தனிமை

வியாழன் அக்டோபர் 29, 2020

கஹதுட்டுவ பிரதேசத்தில் உள்ள  சிகை அலங்கரிப்பு நிலையம்( சலூன்)  ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த சலூனுக்கு வருகைத் தந்த 125 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளரரென, கஹதுட்டுவ பொது சுகாதார பரிசோதகர் ஐ.கே.எம். பிரபாத் தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன்சந்தைக்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், அந்நபர் முடி வெட்டுவதற்காக குறித்தசிகை அலங்கரிப்பு நிலையம் வந்துள்ளதால், சிகை அலங்கரிப்பு நிலைய  உரிமையாளருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.