சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 67வயதுடைய முதியவர்!!

புதன் செப்டம்பர் 15, 2021

உரும்பிராய் பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மணியந்தோட்டத்தைச் சேர்ந்த கே.குணரத்ன (வயது 67) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த முதியவர் ஊரெழு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தொழில் நிமிர்த்தம் சென்று வீடு திரும்பிய வேளை உரும்பிராயில் எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும்,அவர் அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.