சிங்கள இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மாவீரன்!

செவ்வாய் மே 28, 2019

யாழ்ப்பாணத்தில் இறுதிவரை குகன் அண்ணாவை தெரியாத…. தேடாத இராணுவமே இல்லை! அந்த அளவிற்கு சிங்கள இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்…

அங்க சண்டை நடந்துகொண்டிருக்க இங்க தூசு தட்டிகொண்டு இருக்க முடியாது என்று வன்னிக்கு வெளிக்கிட்டவர்… ஈழப்பிரியன் அண்ணையுடன் பூநகரிப் படையணியில் திறம்பட பணியாற்றி…

ஓர் அத்தியாயத்தின் இறுதிப்புள்ளி வரை சென்று தன் மூச்சை ஈழக் காற்றோடு கலந்தது.

ஓய்வின்றிய நேரமது இராணுவ பகுதியிலிருந்து விடுதலைப்புலிகள் வெளியேறிய பின் நிரப்பவேண்டிய இடைவெளிகளும் பணிகளும் ஏராளம் இருந்து… இராணுவ சுற்றிவளைப்புக்கள் இராணுவ புலனாய்வாளர்களின் தாக்குதல்கள் EPDP காட்டிக்கொடுப்புக்கள்…. ஓர் இடத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நின்றால் தகவல் அறிந்து ஆமி வந்திடுவான்… படுகொலைகள் சதாரணமாக இடம்பெற்றுக்கொண்டிருத்தன….

சூரிய வெளிச்சத்துக்கு முன்னமே அன்றைக்கான பணிகளை அடுக்கிக்கொண்டே இருப்பார். இதற்கிடையில் “இண்டைக்கு எங்க செய்யப்போறம்?…. இடம் பார்த்திட்டியா?… அவன தூங்க விடக்கூடாது… ஒண்டோ இரண்டோ செய்தே ஆகவேணும்….. ஒரு பொழுதைக்கூட வீணாக்க விரும்பாத பிறவி…

இரவு சுற்றிவளைப்புக்கள்… நாய்களின் குரைச்சல்… பேப்பர சுத்தி தலைக்க வைச்சுகொண்டு…
தூக்கமா வரும்? சத்தமா கதைக்கவும் முடியாது. தூங்கப்போறது ஓர் இடத்தில காலையில் இன்னொரு இடத்தில…

இதற்கிடையில் தொலைதேசம் இருந்து வந்த அம்மாவ பார்க்க பதுங்கிப் போய்
மனுசன் ஐஞ்சு நிமிசம் கூட கதைக்கவில்லை.. நெற்றியில் வைத்துவிட்ட வீபூதியுடன், அம்மா தந்த கோவில் நூலையும் வாங்கிக்கொண்டு வந்திட்டம்….….

இரணமாகி…உங்களுடன் துணை நின்ற நினைவுகளை மீட்டு குகன் அண்ணனுக்கு எமது வீரவணக்கங்கள்….!