சிங்கள தலைவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்-நவீன் திசாநாயக்க

செவ்வாய் ஓகஸ்ட் 13, 2019

13 ஆவது அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சகல சரத்துக்களையும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட விருப்பம் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் சிங்கள தலைவர்கள் தேடி பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அவ்வாறு சிங்கள தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை தேடி பார்க்காவிடின், எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் எனவும் அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.