சிங்களக் கைக்கூலிகளின் கட்டிப்பிடி வைத்தியம்!

செவ்வாய் ஏப்ரல் 16, 2019

நாடுகடந்து தமிழீழ அரசாங்கம் அமைத்துத் தமிழீழ விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் விசுவநாதன் உருத்திரகுமாரன் கும்பல், சிங்கள அரசாங்கத்துடன் நெருங்கிய உறவைப் பேணி வருவதை உறுதி செய்யும் அதிர்ச்சியூட்டும் நிழற்பட ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

சிங்கள அரசாங்கத்தின் கைப்பாவையான கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் அவர்களால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கானல்நீர் அமைப்பு சிங்களப் புலனாய்வாளர்களின் நிகழ்ச்சி நிரலின் படியே செயற்படுகின்றது என்பதற்கான ஆதாரங்களைக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சங்கதி-24 இணையம் வெளியிட்டு வந்துள்ளது.

Suthanraj

இந்நிலையில் சிங்களப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரபற்றற்ற அமைச்சராக விளங்குபவரும், ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்குக் காரணமாகத் திகழ்பவருமான மதியாபரணம் ஏபிரகாம் சுமந்தரன் அவர்களைக் கட்டியணைத்தவாறு விசுவநாதன் உருத்திரகுமாரனின் கனவுலக அரசாங்கத்தின் ஊடக அமைச்சரான சுதன்ராஜ் என்பவர் நிழற்படம் எடுத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Suthanraj1

மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டித் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் விலாங்கு மீன் போல் தமிழீழ விடுதலை பற்றி வாய்கிழியக் கத்தியவாறு, சிங்கள அரசாங்கத்தின் அதிகாரபற்றற்ற அமைச்சருடன் உருத்திரகுமாரனின் கனவுலக அமைச்சர் கட்டிப்பிடி வைத்தியம் செய்வது அக் கும்பலின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டியிருப்பதாக தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கருத்து வெளியிட்வெளியிட்டுள்ளனர்.