சிங்களப் படைகளுக்கு வக்காலத்து வாங்கும் ஐ.பி.சியின் சகோதர ஊடகம் - கடும் சீற்றத்தில் புலம்பெயர் தமிழர்கள்!

வியாழன் ஜூன் 27, 2019

ஈழத்தீவை விட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம் அகன்ற கடந்த எழுபத்தொரு ஆண்டுகளில் இரண்டரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்து இனவழிப்பு செய்த சிங்களப் படைகளுக்கு வக்காலத்து வாங்கும் நடவடிக்கையில் ஐ.பி.சி – தமிழ் எனப்படும் தனியார் ஊடகத்தின் சகோதர ஊடகமான தமிழ்வின் என்ற இணைய ஊடகம் ஈடுபட்டிருப்பது புலம்பெயர்வாழ் தமிழர்களைக் கடும் சீற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபற்றற்ற வெளிநாட்டு வானொலியாக இயங்கிய ஐ.பி.சி – தமிழ் அதற்குப் பொறுப்பாக இருந்த முரசு (ரகு, நாதன் அல்லது பாண்டியன்) என்ற சுவிற்சர்லாந்தில் வாழும் முன்னாள் போராளியால் 2009 வைகாசி 18இற்குப் பின்னர் நட்டாற்றில் கைவிடப்பட்ட நிலையில் அது அதன் சட்டபூர்வ பணிப்பாளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்த பினாமிகளால் கையகப்படுத்தப்பட்டு, பின்னர் சத்தி என்ற வணிகருக்கு கைமாற்றப்பட்டு, 2014 தை மாதம் பரா பிரபா என்ற லிபரா நிறுவனத்தின் பணியாளரால் விலை கொடுத்து வாங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் 2014 மாசி மாதம் லிபரா என்ற தொலைபேசி நிறுவனத்தை நடத்தி வந்த கந்தையா பாஸ்கரன் என்பவரிடம் கையளிக்கப்பட்டது.

 

Rajen

 

சிங்கள ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட யாழ்ப்பாணத்தில் தனது கலையகத்தைக் கொண்டிருக்கும் இந்த ஊடகம், அடிக்கடி சிங்களப் படைகளுக்கு துதிபாடுவதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அவதூறு விளைவிப்பதிலுமே கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றது.

 

Tamilwin

 

தமிழ் மக்களின் உடலில் சிங்களக் குருதி ஓடுகின்றது, போதைப் பொருள் கடத்தல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டார்கள் என்றெல்லாம் போலிப் பரப்புரைகளில் இவ் ஊடகம் ஈடுபட்டிருந்த நிலையில், அதன் சகோதர ஊடகமான தமிழ்வின் என்ற இணைய ஊடகம், கிளிநொச்சியில் தொடருந்து விபத்தில் சிங்களப் படையினர் பலியானதால் கிளிநொச்சி மக்கள் சோகத்தில் ஆழ்ந்திருப்பதாக புதன்கிழமை செய்தி வெளியிட்டமை புலம்பெயர்வாழ் தமிழ் மக்களைக் கடும் சீற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

 

Tamilwin1

 

இது இவ்விதம் இருக்க தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு பிரான்சில் இவ் ஊடகத்திற்கு வால்பிடிக்கும் சிலர், அதன் செய்கையைக் கண்டும் காணாதது போல் இருப்பது, சிங்கள அரசின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இவர்கள் செயற்படுகின்றார்களா? என்ற சந்தேகத்தைக் கிளப்புவதாகத் தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tamilwin2