சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

செவ்வாய் சனவரி 26, 2021

கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறும் கொவிட்-19 பாதிப்புற்ற சிறைக்கைதிகளுக்கு சட்டவிரோதமாக உணவுப் பொதிகளை வழங்கி வந்த சிறைக்காவலர் ஒருவர் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது தங்குமிடத்தில் உணவுபொதிகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து உணவுப்பொருட்களுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா பணமும் இரண்டு லைட்டர்களும் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.