சிறைப்பிடித்த ஒரு வீரரை விடுவிக்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைை!

புதன் ஏப்ரல் 07, 2021

சத்தீஸ்கரில் சுக்மா-பிஜாபூர் எல்லையில் கடந்த சனிக்கிழமை நக்சல்களை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த பாதுகாப்புப்படை வீரர்களை வனப்பகுதிக்குள் இழுந்துச் சென்ற நக்சலைட்டுகள், பாதுகாப்பு படை வீரர்களை கொலை செய்தனர்.

நக்சலைட்டுகள் மற்றும் படை வீரர்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் மொத்தம் 24 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த 24 சி.ஆர்.பி.எப் வீரர்களுடன் தங்களது தரப்பில் 4 பேர் உயிரிழந்ததாக நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு சி.ஆர்.பி.எப் படை வீரர் தங்கள் வசம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் எதிரிகள் இல்லை எனவும், தங்கள் வசம் உள்ளவரை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும், நக்சலைட்டுகள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, தாக்குதல் காரணமாக பிஜாப்பூர் எல்லை கிராமங்களில் இருந்து வெளியேறிய கிராம மக்கள், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.