சிறீலங்கா இழைத்த தவறுகளிலிருந்து தமது நாடு பாடம் கற்றுள்ளது!!

ஞாயிறு மார்ச் 28, 2021

சீனாவுடனான தொடர்புகளைப் பேணும் போது இலங்கை இழைத்த  தவறுகளிலிருந்து  தமது நாடு பாடம்  கற்றுக்கொள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் ஹசீனாவின் வெளிவிவகார ஆலோசகர் கௌஹர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவுடனான தொடர்புகளின் போது மிகவும் சீரானதும் சரிவர அளவீடு செய்யப்பட்டதுமான முதலீட்டுக்கொள்ளையையே தாம் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபோட்ரி போன்ற  நாடுகள் சீனாவிடம் பெற்ற கடனை மீளச்செலுத்துவதற்கான ஆற்றலை இழந்துள்ளமையினால் அவற்றின் சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை சீனாவிற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளமையில் இருந்து தமது நாடு பாடம் கற்றுக்கொண்டுள்ளதாகவும் ரிஸவி தெரிவித்துள்ளார்.

மேலும் எமது நாட்டின் இறையாணமையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம்.விடுதலையை இலக்காக்கொண்ட போராட்டத்தின் ஊடாக நாம் தற்போது சுதந்திர நாடாக உள்ளோம்.

ஆகவே எமது பெறுவனவுகளைச் சரிவரக் கண்காணிக்கும் அதேவேளை, வெளிநாடுகளிடம் இருந்து பெறும் கடன்களை மீளச்செலுத்தக்கூடிய எமது ஆற்றல் தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் இருக்கிறோம்.

என்று பங்களாதேஷ் பிரதமரின் வெளிவிவகார ஆலோசகர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சீனா தனது “கடன் பொறி“ மூலோபாயத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தியடைந்து வருகின்ற மற்றும் அபிவிருத்தியடையாத நாடுகளைக் கவர்ந்திழுக்கும் வேளையில், இவ்வாறானதொரு கருத்து வெளியாகியிருப்பதாக சர்வதேச ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.