சிறீலங்கா இராணுவ வாகனம் மோதியதில் இருவர் படுகாயம்!

செவ்வாய் செப்டம்பர் 10, 2019

திருகோணமலை-கந்தளாய் பிரதான வீதி, தம்பலகாமம் சந்தியில் நேற்றிரவு 9.30 மணியளவில் இராணுவ கெப் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதிய விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
   
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தம்பலகாமம்- பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் லோகராணி (52 வயது) மற்றும் முருகேசு சித்திரவேல் (54 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் சீனக்குடா இராணுவ முகாமில் கடமையாற்றும் லாஸ் கோப்பல் அம்பாறை - உஹன பகுதியைச் சேர்ந்த இந்திக்க சதறுவன் அபேகோன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.