சிறீலங்கா கடற்படையின் பராக்கிரமபாகு கப்பல் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள்!!

புதன் மார்ச் 24, 2021

கடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி வீரவணக்க நாள் இன்றாகும்.
 
முல்லை கடற்பரப்பில் 24.03.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் பராக்கிரமபாகு கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
விடுதலைப் புலிகளின் சாலைக் கடற்படைத் தளம் மீது தாக்குதல் செய்வதற்கான பெரும் கடற்கலங்கள் என பலமான நிலையில் வந்த சிறிலங்கா கடற்படையினர் மீது மூண்ட கடற்சமரில் தாக்குதலில் இலக்காக “பராக்கிரமபாகு” கப்பல் தேர்வாகி அதன் மீது தாக்குதல் நடத்த டோறாக் கலங்களை ஊடறுத்து விரைந்த கரும்புலிப் படகுகள் மீது பராக்கிரமபாகு கப்பலிருந்து மேற்கொள்ளப்பட்ட பீரங்கி சூட்டாதரவால் இலக்கை எட்ட முன்பே கரும்புலிப் படகு தீப்பற்றி வெடித்ததில் நான்கு கடற்கரும்புலிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொள்கின்றனர்.
 
ஐந்தரை மணிநேரச் சண்டையில் இவர்களுடன் லெப்டினன்ட் சுகுணன் (மாவேந்தன்) எனும் கடற்புலிப் போராளியும் கடலிலே காவியம் படைத்தார்.
 
வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………..

கடற்கரும்புலி மேஜர் நாவலன் (மதீஸ்)
கந்தையா முருகையா
2ம் வாய்க்கால், திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 24.03.1997

கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன்
இராசையா மதியழகன்
ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.1997

கடற்கரும்புலி கப்டன் வானதி
இராமையா கலைவாணி
10ம் யூனிற், தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 24.03.1997

கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி
ஆறுமுகம் கசீந்திரா
அராலி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.1997

                                                  {+}{+}{+}{+}{+}{+}{+}{+}{+}{+}{+}

111

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது...

லெப்.கேணல் கலையரசன்
நற்றுணை திருவருள்செல்வன்
அம்பனை, தெல்லிப்பளை
வீரச்சாவு: 24.03.2007

2ம் லெப்டினன்ட் அருள்நம்பி
பரமேஸ்வரன் ஸ்ரிபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.2008

2ம் லெப்டினன்ட் கனியாளன்
நடேசன் குணசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.2008

2ம் லெப்டினன்ட் சேரமுதல்வன்
அடைக்கப்பன் லிங்கேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.03.2008

2ம் லெப்டினன்ட் சோலைவேந்தன்
கதிரேசு கெசிக்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.03.2008

2ம் லெப்டினன்ட் பாசறை
துரைராஜ் குணேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.03.2008

லெப்டினன்ட் முடியரசி
நாகராசா சிவகௌரி
வவுனியா
வீரச்சாவு: 24.03.2008

லெப்டினன்ட் அறிவுமகன்
சோதிலிங்கம் நிரஞ்சன்
மன்னார்
வீரச்சாவு: 24.03.2007

மேஜர் தூயவன்
செபமாலை பிறேம்குமார்
உண்ணாப்புலவு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.03.2007

லெப்டினன்ட் அன்பினியன்
பொன்னம்பலம் பாக்கியசீலன்
7ம் வட்டாரம், கட்டைபறிச்சான் மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 24.03.2000
 

வீரவேங்கை வைஸ்ணவி (சுரபி)
சிவசுப்பிரமணியம் சிவதர்சினி
கனராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 24.03.1998

கப்டன் தனசீலன்
சிவசோதி பாஸ்கரன்
புதியகொலனி, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.03.1998

லெப்டினன்ட் ஈழவாசன்
கனகரத்தினம் இரவீந்திரநாதன்
கொல்லன்கலட்டி, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.1998

2ம் லெப்டினன்ட் பழனிமுத்து
செல்வரட்ணம் சிவகுருராசா
புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.03.1998

வீரவேங்கை நல்லதம்பி
கணேஸ் சசிகரன்
வெருகல் மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 24.03.1997

லெப்டினன்ட் மாவேந்தன் (சுகுணன்)
தங்கேஸ்வரராஜா சண்முகராஜன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.1997

லெப்டினன்ட் லிங்கேஸ்வரன்
செல்லத்துரை இராஜகாந்தன்
பனங்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 24.03.1996

லெப்டினன்ட் அறிவொளி (சோமேஸ்)
பாக்கியராசா திவ்வியகுமார்
7ம் வட்டாரம் சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 24.03.1994

2ம் லெப்டினன்ட் மதுரலிங்கம்
சந்திரபோஸ் அன்ரன் பெர்னான்டோ
மன்னார்
வீரச்சாவு: 24.03.1992

வீரவேங்கை குன்றன்
சுப்பிரமணியம் குமாரவேல்
புளியம்பொக்கனை, கிளிநொச்சி
வீரச்சாவு: 24.03.1991

வீரவேங்கை றோம்
சின்னத்துரை கோணேஸ்வரன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.03.1989

வீரவேங்கை அல்போன்ஸ்
தெய்வேந்திரன் செல்வச்சந்திரன்
செட்டித்தெரு, நல்லூர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.03.1987

வீரவேங்கை நாகு
இளவாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.03.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111