சிறீலங்கா பொலிஸாருடன் சிவில் உடையில் செல்லும் அடையாளம் தெரியாத நபர்கள்!!

வெள்ளி ஜூன் 05, 2020

கொழும்பில் வீடுகளுக்கு விபரம் சேகரிக்க பொலிஸாருடன் சிவில் உடையில் செல்லும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் இன்று (05) பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்பு நடவடிக்கையாக கொழும்பில் தற்காலிகமாக வசிப்பவர்கள்–வாக்காளர் பதிவற்றவர்களை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அண்மையில் அறிவுறுத்தப்பட்டது.இதனைத்தொடர்ந்து வீடுகளுக்கு பொலிஸாருடன் சிவில் உடையில் மர்ம நபர்களும் சென்று தகவல் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.