சிறீலங்காவில் கொரொனா தொற்றினால் பாதிப்பு 56 ஆயிரத்தை கடந்துள்ளது.

வெள்ளி சனவரி 22, 2021

சிறீலங்காவில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்றைய 21.01.2021 தினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது,

பேலிய கொடை கொரோனா கொத்தணியுடன தொடர்புடைய 866 பேரும், கைதிகள் 7 பேரும் இவ்வாறு நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், நாட்டில் அண்மைய நாட்களில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது,

மேலும் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது.,

பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கடுமையான நியூமோனியாவினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது,

இந்த நிலையில் நாட்டின் 66 சிகிச்சை நிலையங்களில் 7ஆயிரத்து 804 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 792 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.