சிறீலங்காவுக்கான பாகிஸ்த்தான் உயர்ஸ்த்தானிகர் கிழக்கு மாகாண ஆளுநர் விசேட சந்திப்பு!!

சனி மே 30, 2020

சிறீலங்காவுக்கான பாகிஸ்த்தான் உயர்ஸ்த்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முகம்மட் சாட் கட்டாக் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியாரிற்கிடையிலான விசேட சந்திப்பு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த திகதி 28 இடம்பெற்றது.இருநாடுகளிற்கிடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டு சந்தர்ப்பங்களில் தமது நாடு கூடுதலாக கவனம் செலுத்தயிருப்பதாக பாகிஸ்தான் உயர்ஸ்த்தானிகர் இதன்போது தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விவசாய அபிவிருத்தியை மேம்படுத்த தேவையான தொழிநுட்ப உதவியை வழங்குவதாகவும் இருநாடுகளிற்கிடையிலான உறவுகளைமேம்படுத்தி அதன் மூலம் உயரிய பலனை அடையும் வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் இதன்போது உயர்ஸ்த்தானிகர் தெரிவித்தார்.இதில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் புலமைப்பரிசில்கள் உட்பட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.