சிறிலங்கா ஐனாதிபதியால் எந்த நன்மையும் கிடையாது!

வியாழன் நவம்பர் 21, 2019

சிறிலங்கா ஐனாதிபதியால் இந்த நாட்டிற்கு எந்த நன்மையும் கிடையாது என ஜக்கிய சோசலிசக் கட்சியின்  தலைவர் சிறீதுங்க ஜெயசூரிய தெரிவித்தார்  யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டிலே இதனைத் தெரிவித்தார்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

ஐனாதிபதி கோத்தாபய ராஜபக்ச  தனது முதலாவது உரையில் தான் சிங்கள  பெளத்த மத வாக்குகளால் தான் தெரிவு செய்யப்பட்டேன் ஆகையால் அவைக்கே முன்னுரிமையேன்றவாறு தனது கருத்துக்களை கூறியுள்ளார் அவ்வாறு கூறுபவர் ஏனைய மக்களுக்கு எதையும் செய்யமாட்டார்

இதுமட்டுமன்றி  பெளத்த மதம்பற்றி கூறியுள்ள போதும் ஏனைய மதங்களைப்பற்றி எதையும் கூறவில்லை ஆகையால்  பெளத்த மதத்தையே  முன்னுரிமைப்படுத்துவார் மேலும்  அவர் மீதான வழக்குகள் இருந்த போது அதற்கு சமுகமளிக்காது பாதுகாப்பு காரணங்கள் கூறியவர் இனிவரும் காலத்தில் அவைதொடர்பான வழக்குகள் இடம்பெறமாட்டாது  பாதிக்கப்பட்டமக்களுக்கு ஏத்தகைய நன்மைகளையும் அவர் செய்யப்போவதும் இல்லை

சிங்கள பெளத்த   மக்களை நோக்கியதாகவே  வேலைத்திட்டங்கள் இடம்பெறும் ஏனைய மக்களுக்கு எத்தகைய நன்மைகளும் கிடைக்காது இதனால் இந்த ஐனாதிபதியால் நாட்டிற்கு நன்மைகள் ஏதும் இல்லை என்றார் இதேவேளை ஐக்கியதேசியக் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கேட்ட போது

ஐனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிறேமதாச இளம் வயதினரை அரவணைக்கத் தவறி விட்டார் அதனால் அவர் தோல்வியடைந்தார் இனிவரும் காலங்களில் அதனை சரிவரசெய்யவேண்டும் இதுமட்டுமன்றி ஏதிர்கட்சியாக இருப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு  தகுதியில்லை அவர்  அரசியலில் இருந்து விலக வேண்டும் என்றார்.