சிறிலங்கா அரசவிடுமுறை நீடிப்பு- அத்தியாவசிய சேவைகள் இயங்கும்!

செவ்வாய் மார்ச் 17, 2020

சிறிலங்கா  அரசாங்கம் அரச விடுமுறையை மேலும் மூன்று நாட்களிற்கு நீடித்துள்ளது. இன்று முதல் வியாழக்கிழமை வரை அரச விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

 எனினும் வங்கி சுகாதார சேவை உட்பட அத்தியாவசிய சேவைகளை சேர்ந்தவர்கள் தமது பணிகளில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

 கொரோனா வைரசினை  பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக  தனியார் துறையினரையும் விடுமுறையை வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.