சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது

வியாழன் அக்டோபர் 29, 2020

நாடாளுமன்றம் இன்று 29 ஆம் திகதி வியாழக்கிழமை சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று அச்சுறுத் தலை எதிர்கொண்டு நாடாளுமன்றத்தின் எதிர்கால நட வடிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

முழுமையான தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்றம் நேற்றைய தினம் மீண்டும் திறக்கப்பட் டமை குறிப்பிடத்தக்கது.