சிறிலங்காவில் முதல் பெண் பிரதி காவல் துறை மா அதிபர் நியமனம்

செவ்வாய் செப்டம்பர் 22, 2020

 

சிறிலங்கா  காவல் துறை வரலாற்றில் முதன்முறையாக பெண் காவல் துறை அதிகாரிக்கு பிரதி  காவல் துறை  மா அதிபராக பதவி உயர்வு வழங்க தேசிய காவல் துறை ஆணைக்குழு  அனுமதி வழங்கியுள்ளது.

09 பெண் மூத்த பெண் காவல் துறை பரிசோதர்களின் பெயரை தேசிய காவல் துறை ஆணைக்குழுவுக்கு  பதில்  காவல் துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பரிந்துரைத்துள்ளதுடன், அதிலிருந்து ஒருவரை பிரதிகாவல் துறை மா அதிபராக தரமுயர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து,காவல் துறை திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தைச் சேர்ந்த பிம்ஷானி ஜசிங்கராச்சி, பிரதி காவல் துறை மா அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜசிங்கரச்சி 1997 ஆம் ஆண்டு காவல் துறை பரிசோதகராக சேவையில் இணைந்தார். பின்னர் 2017 இல் காவல் துறை  அத்தியட்சகராக தரமுயர்த்தப்பட்டார்.

காவல் துறை  துறையில் உயர் பதவியை வகித்த முதல் பெண் அதிகாரி சிரேஷ்ட்காவல் துறை அத்தியட்சகர்  பிரமிளா திவாகர ஆவார். 

இவர், பெண் அதிகாரி இவர் சிரேஷ்ட்காவல் துறை  அத்தியட்சகர் தரத்தில் இருந்த போது, பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

பெண் அதிகாரியை பிரதி  காவல் துறை மா அதிபராக நியமிக்கும் தீர்மானத்ததை முதல் முறையாக தற்போது  காவல் துறை திணைக்களம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.