சிறிதரன் மீது சட்ட நடவடிக்கை

புதன் ஜூலை 15, 2020

கள்ள வாக்குகள் போட்டேன்  என்று பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சி.சிறிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

 எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் நிலைமைகளை ஆராய்வதற்காக மஹிந்த தேசப்பிரிய நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

 இதன்போது ஊடகவியலாளர்களையும் சந்தித்துப் பேசினார். அவரிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், “2004 ஆம் ஆண்டு தேர்தலில் நான் ஒருவனே 75 வாக்குகளைப் போட்டேன் ; என்று கூறியிருந்தார். 

அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், “இது தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அது தொடர்பில் ஆணைக்குழுவில் பரிசீலித்து வருகின்றோம் அதற்குரிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என்று கூறினார்.