சிரிய எழுச்சிப் போராட்டத்தின் அடையாளமான இளைஞன் பலி!!

திங்கள் ஜூன் 10, 2019

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் அடையாளமாக மாறிய அப்தல் பாசித் அல் சரூத் என்ற கால்பந்து வீரர் நாட்டின் வட கிழக்கில் நிலவும் மோதலில் காயத்திற்குள் உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

27 வயதான அப்தல் பாசித், ஹமா மாகாணத்தில் உயிரிழந்ததாக அவரது கிளர்ச்சியாளர் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

சிரிய இளையோர் அணியின் எதிர்பார்ப்பு மிக்க கோல்காப்பாளராக இருந்த அவர், 2011 ஆம் ஆண்டு தனது சொந்த நகரான ஹோம்ஸில் வீதி ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டபோது அதில் பங்கேற்றார்.

ஹோம்ஸில் நீடித்த கொடிய அரச முற்றுகையில் தனது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர் உயிர் தப்பினார். சிரிய கிளர்ச்சிப் போராட்டத்தில் முக்கிய அடையாளமாக அப்தல் பாசித்தின் கதை மாறியது.

இந்நிலையில் அவர் மரணித்ததை அவரது ஜெயிஷ் அல் இஸ்ஸா கிளர்ச்சிக் குழுவின் தளபதி ஒருவர் அறிவித்துள்ளார்.

2011 இல் அஸாத் எதிர்ப்பு ஆர்ப்பட்டம் வெடித்தபோது 19 வயதாக இருந்த அப்தல் பாசித்தின் குரல்,போராட்டத்தை ஊக்குவிப்பதாக ஒலித்தது.