சிறுவர் ஆபாசத்தை தடை செய்யும் பிரேரணைக்கு ஒப்புதல்

வியாழன் செப்டம்பர் 24, 2020

நாட்டில் சிறுவர் ஆபாசத்தை தடை செய்வதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அண்மைய கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது.

அண்மைய காலங்களில் வெவ்வேறு ஊடகங்களில் சிறுவர் ஆபாசம் வேகமாக அதிகரித்திருப்பதைக் கருதியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய வெளியீடுகள் தொடர்பான சட்டங்கள் தண்டனைச் சட்டம் மற்றும் ஆபாச வெளியீடுகள் கட்டளைச் சட்டத்தில் இருந்தாலும், அவை தற்போது போதுமானதாக இல்லை என்பது அரசாங்கத்தின் கருத்தாகும்.

இலங்கையின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப முகவரகம் மற்றும் இலங்கை கணினி அவசர பதில் பிரிவு ஆகியன சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் புதிய பிரேரணையை உருவாக்கத் தேவையான தகவல்களைக் கொண்ட ஓர் ஆவணத்தை ஏற்கனவே தயாரித்துள்ளன.

நீதி அமைச்சர் அலி சஃரி இந்தத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.