சிவாஜி, ஹிஸ்புல்லா ஒப்பந்தக்காரர்கள்!

புதன் நவம்பர் 13, 2019

சஜித்தும், கோத்­த­பா­யவும் 50 சத­வீத வாக்­கு­க­ளுக்­காகப் போட்­டி­யிடும் போது 5 சத­வீ­தத்­திற்­காகப் போட்­டி­யி­டு­கின்ற அநு­ர­கு­மா­ர­விற்கு வாக்­க­ளித்து, வாக்­கு­களை விர­ய­மாக்க முடி­யாது. அதே­போன்று வடக்­கி­லி­ருந்து சிவா­ஜி­லிங்­கமும், கிழக்­கி­லி­ருந்து ஹிஸ்­புல்­லாவும் வேட்­பா­ளர்­க­ளாகக் கள­மி­றங்­கி­யி­ருக்­கி­றார்கள். இவர்கள் ஒப்­பந்­தக்­கா­ரர்கள்.

உண்­மையில் இவ்­வா­றான ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பதும், அநு­ர­கு­மார திஸா­நா­யக்­க­விற்கு வாக்­க­ளிப்­பதும், எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் வாக்­க­ளிக்­காமல் பகிஷ்­க­ரிப்­பதும் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு அளிக்­கின்ற வாக்­கு­க­ளா­கவே அமையும் என்று தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலைவர் அமைச்சர் மனோ­க­ணேசன் தெரி­வித்தார்.


சினிவேல்ட் டவரில் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை மாலை நடை­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்  


ஜனா­தி­பதித் தேர்தல் திகதி நெருங்­கி­யுள்ள நிலையில் தேர்தல் பிர­சா­ரங்கள் முடி­வ­டை­ய­வி­ருக்­கின்­றன. எனவே இப்­போது சில விட­யங்கள் குறித்து அவ­சியம் பேச­வேண்டும் என்று கரு­து­கின்றேன். தற்­போது ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரை உரு­வாக்­கு­வ­தற்­காக நாடு முழு­வதும் பிர­சா­ரக்­கூட்­டங்­களில் கலந்­து­கொள்­கின்றோம். தொடர்ச்­சி­யாக ஓடிக்­கொண்­டி­ருக்­கின்றோம். ஜனா­தி­ப­தியை உரு­வாக்­கு­வது என்­பதை விடவும், வரப்­போ­கின்ற ஆபத்தைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­கான பிர­ளயம் ஒன்றை செய்­கின்றோம் என்­பதே பொருத்­த­மாக இருக்கும்.

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாஸ மீதான நேசம், பற்று என்­ப­வை­யெல்லாம் ஒரு­பு­ற­மி­ருக்க, எதிர்த்­த­ரப்பின் வேட்­பாளர் மீதான வெறுப்பு அதி­க­மாக இருக்­கின்ற கார­ணத்­தி­னா­லேயே அவர் தேர்­தலில் வெற்றி பெற்­று­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக பலரும் சஜித்தை ஆத­ரிக்­கின்­றார்கள் எனத் தோன்­று­கி­றது. எனவே சஜித் பிரே­ம­தாஸ ஜனா­தி­ப­தி­யான பின்னர் எதி­ரணி வேட்­பாளர் மீதான வெறுப்பின் கார­ண­மாக வாக்­க­ளித்­த­வர்­களின் மனங்­க­ளையும் வெற்­றி­கொள்ள வேண்­டிய கடப்­பாடு அவ­ருக்கு இருக்­கின்­றது. அதனைச் செய்வார் என்ற நம்­பிக்கை எமக்கு இருக்­கின்­றது.

சஜித் பிரே­ம­தாஸ ஒரு கௌதம புத்தர் என்றோ அல்­லது மகாத்மா காந்தி என்றோ கூறி நாங்கள் அவ­ருக்­காக வாக்கு கேட்­க­வில்லை. மாறாக வர­வி­ருக்­கின்ற ஆபத்தைத் தடுத்து நிறுத்­தி­விட வேண்டும் என்­பதே வடக்கு, கிழக்கு, மலை­யகம் உள்­ளிட்ட அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் மன­நி­லை­யாக இருக்­கின்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் கூட காட்­டா­றாக வர­வி­ருக்கும் ஆபத்தைத் தடுப்­ப­தற்­காக அணை கட்­டு­வ­தா­கவும், சஜித் பிரே­ம­தா­ஸவே அந்த அணை என்றும் குறிப்­பிட்டார்.

இம்­முறை தேர்தல் பிர­சா­ரத்தில் நாம் பாரி­ய­தொரு புரட்­சியைச் செய்­தி­ருக்­கிறோம். காலி­மு­கத்­தி­டலில் இடம்­பெற்ற புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் முத­லா­வது தேர்தல் பிர­சாரக் கூட்­டத்­திற்கு அடுத்­த­ப­டி­யாக தமிழ் முற்­போக்குக் கூட்­டணி ஏற்­பாடு செய்­தி­ருந்த தல­வாக்­கலை தேர்தல் பிர­சாரக் கூட்­டத்­திற்கே பெரு­ம­ள­வான கூட்டம் கூடி­யது.

இரத்­தி­ன­புரி, கேகாலை, அவி­சா­வளை, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய ஐந்து இடங்­களில் பிரம்­மாண்­ட­மான கூட்­டங்­களை சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஆத­ர­வாக நடத்­தினோம். அந்த 5 கூட்­டங்­க­ளிலும் பெரு­ம­ள­வான பொது­மக்கள் கலந்­து­கொண்­டி­ருந்­தார்கள். எனவே இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாஸ அடை­யப்­போ­கின்ற பாரிய வெற்­றியில் ஜன­நா­யக மக்கள் முன்­னணி மற்றும் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் பங்­க­ளிப்பு பெரு­ம­ளவில் உள்­ளது என்­பது அவர் நன்கு அறிந்­தி­ருப்பார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்குச் சம­ள­வாக தமிழ் முற்­போக்குக் கூட்­டணி வட, கிழக்­கிற்கு வெளியே சுமார் 7 – 8 இலட்சம் வாக்­கு­களை திரட்டி சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு வழங்­கி­யி­ருக்­கி­றது என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது.

சஜித்­திற்கு ஆத­ரவு வழங்கும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளான தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, இலங்கை முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகி­ய­வற்றில் பெரு­ம­ள­வான வாக்­கு­களை சஜித்­திற்குத் திரட்­டிக்­கொ­டுத்­தது எமது தமிழ் முற்­போக்குக் கூட்­டணி என்­பதே உண்­மை­யாகும். எனவே தேர்தல் முடி­வ­டைந்த பின்னர் இதனை நான் சஜித்­திடம் கூறுவேன். ஏனெனில் நாம் கடி­ன­மாகப் பாடு­படும் வேளையில், அதற்­கான புள்­ளி­களை வேறொ­ருவர் பெற்­றுக்­கொண்டு போவ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. அதில் நாம் தெளி­வாக இருக்­கின்றோம்.

கடந்­த­கால ஜனா­தி­பதித் தேர்­தல்­களைப் பொறுத்­த­வரை 2010 ஆம் ஆண்டில் பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சே­காவை கள­மி­றக்­கினோம். 2015 இல் கள­மி­றக்­கி­யவர் போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்குத் தூக்­குத்­தண்­டனை வழங்­குவேன் என்று கூறி­விட்டு, தற்­போது மது­போ­தையில் அப்­பாவிப் பெண்ணைக் கொலை செய்த நபரை விடு­தலை செய்­து­விட்டுச் செல்­கிறார்.

இந்­நி­லையில் 25 வரு­டங்­க­ளுக்குப் பிறகு ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லி­ருந்து ஒரு­வரைக் கள­மி­றக்­கு­வதன் ஊடா­கவே அக்­கட்சி மீண்டும் எழுச்­சி­பெறும் என்று கருதி, அக்­கட்­சி­யி­லி­ருந்தே வேட்­பாளர் ஒரு­வரைக் கள­மி­றக்­க­வேண்டும் என்று தீர்­மா­னித்தோம். எனவே தமிழ், முஸ்லிம் மக்­களைப் பொறுத்­த­வரை ஒரு கேட­ய­மாக, அணை­யாகத் திகழ்­கின்ற சஜித் பிரே­ம­தா­ஸவை வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்க வேண்­டு­மென்று கோரினோம். ஆனால் அப்­போது சஜித்தைக் கள­மி­றக்­கு­வதை எதிர்த்­த­வர்கள் எல்லாம் இப்­போது அவ­ருக்கு ஆத­ர­வாகக் கூட்டம் நடத்­த­வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்டு விட்­டார்கள். இன்­ற­ளவில் நாடு முழு­வதும் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்­கான ஆத­ரவு நாளுக்கு நாள் பெரு­கி­வ­ரு­கின்­றது.

அதே­வேளை தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களால் மாத்­திரம் சஜித் பிரே­ம­தா­ஸவை வெற்றி பெறச்­செய்­து­விட முடியும் என்று கனவு காணக்­கூ­டாது. சிங்­கள மக்­களின் கணி­ச­மான வாக்­கு­க­ளுடன் சிறு­பான்­மை­யின வாக்­குகள் சேரும் போதே சஜித்தின் வெற்­றியை உறு­தி­செய்ய முடியும். எனவே வாக்­கு­ரிமை உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் அனை­வரும் தமது வாக்­கு­களைக் கட்­டா­ய­மாகப் பயன்­ப­டுத்த வேண்டும். அப்­போது தான் பெரும்­பான்­மை­யி­னரின் வாக்­குகள் குறைந்­தாலும், எமது வாக்­குகள் ஊடாக ஈடு­செய்யக் கூடி­ய­தாக இருக்கும்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிப்­ப­தற்குத் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. அவர்கள் சற்றே தாம­த­மாகத் தீர்­மா­னித்­தாலும் அதில் நியா­ய­மி­ருக்­கி­றது. நாங்கள் அர­சாங்­கத்­திற்குள் இருக்­கின்ற பங்­கா­ளிக்­கட்­சிகள். ஆனால் அவர்கள் நேசக்­கட்­சிகள் மாத்­தி­ரமே. எனவே எம்மைப் போன்று கட்சி என்ற ரீதியில் விரை­வாகத் தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள முடி­யாது. எனினும் அவர்­க­ளுக்கு முன்­ப­தா­கவே வட, கிழக்கு மக்கள் யாருக்கு வாக்­க­ளிப்­பது என்­பதை முடிவு செய்­து­விட்­டார்கள் என்­பதே உண்மை.

இது ஜனா­தி­பதித் தேர்­த­லே­யன்றி, பாரா­ளு­மன்றத் தேர்தல் அல்ல. இதில் வெற்றி பெறப்­போ­கின்ற சஜித் பிரே­ம­தாஸ மற்றும் தோல்­வி­ய­டையப் போகின்ற முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத­பாய ராஜ­பக்ஷ ஆகிய இரு தரப்­பி­னரே உள்­ளனர். எனது மிக நெருங்­கிய நண்­ப­ரான அநு­ர­கு­மார திஸா­நா­யக்க, சஜித் பிரே­ம­தாஸ மற்றும் கோத­பாய ராஜ­பக்ஷ ஆகி­யோரை விடவும் தகை­மை­களின் அடிப்­ப­டையில் சிறந்­த­வ­ராவார். ஆனால் மக்கள் விடு­தலை முன்­னணி தற்­போது தமிழ், முஸ்லிம் மக்­க­ளிடம் வாக்கு கோரு­வது பிழை­யா­னது.

அவர்கள் சிங்­கள மக்­க­ளிடம் சென்று ஓர­ளவு வாக்­கு­களைப் பெற்­றுக்­கொண்­டதன் பின்னர் சிறு­பான்மை இனத்­த­வ­ரிடம் வாக்குக் கோரலாம். ஆனால் அவ்வாறு நடக்கும் போது இந்த நாட்டில் தமிழர்களே இல்லாமல் போயிருப்பார்கள். தற்போது சஜித்தும், கோதபாயவும் 50 சதவீத வாக்குகளுக்காகப் போட்டியிடும் போது 5 சதவீதத்திற்காகப் போட்டியிடுகின்ற அநுரகுமாரவிற்கு வாக்களித்து, வாக்குகளை விரயமாக்க முடியாது. அதேபோன்று வடக்கிலிருந்து சிவாஜிலிங்கமும், கிழக்கிலிருந்து ஹிஸ்புல்லாவும் வேட்பாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள்.

இவர்கள் ஒப்பந்தக்காரர்கள். உண்மையில் இவ்வாறான ஒப்பந்தக்காரர்களுக்கு வாக்களிப்பதும், அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாக்களிப்பதும், எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் பகிஷ்கரிப்பதும் கோதபாய ராஜபக்ஷவிற்கு அளிக்கின்ற வாக்குகளாகவே அமையும்.

நான் ரணிலுக்கோ அல்லது சஜித்திற்கோ காவடி தூக்கவுமில்லை, சாமரம் வீசவுமில்லை. ஆனால் எனது மக்களுக்காக காவடி தூக்குவதற்குத் தயாராகவே இருக்கின்றேன்.