சிவில் பாதுகாப்பு பிரிவால் மாற்றப்படும் முன்பள்ளிகளின் பெயர்கள்

சனி ஓகஸ்ட் 06, 2022

கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சம்பளம் பெறுகின்ற ஆசிரியர்கள், தாம் கல்வி கற்பிக்கின்ற  முன்பள்ளிகளின் பெயர்களை “வீரமுத்துக்கள் முன்பள்ளி” என பெயரினை மாற்றி அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, ஒரு போதும் அதனை அனுமதிக்க முடியாது என கரைச்சி பிரதேச சபையின் சமத்துவக் கட்சியின்  உறுபினர் செல்வராணி தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் உள்ள மயூரன் முன்பள்ளியின் பெயரினை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் வீரமுத்துக்கள் முன்பள்ளி என மாற்றியிருகின்றார்கள் இதற்கு நாம் பிரதேச மக்களுடன் இணைந்து கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டோம்.  

எங்கள் கிராமங்களில் உள்ள முன்பள்ளிகள் மக்களிள் சொத்து.  அவற்றுக்கு பொறுப்புச் சொல்லவேண்டியது மக்களே. இந்த நிலையில மக்களின் கருத்துக்கள் எதனையும் பெற்றுக்கொள்ளாது ஆசிரியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவதற்காக அவர்கள் விரும்பியதனை செய்துவிட அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

மேலும், இச் செயற்பாட்டினை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், இன்று  கண்ணகிநகர் மற்றும் பிரமந்னாறு பகுதிகளில் உள்ள இரண்டு முன்பள்ளிகளில்  அமைக்கப்பட்ட பெயர் பலகையினை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.