சிவனொளிபாதமலைக்கு சென்ற கம்போடிய பிக்கு உயிரிழப்பு!

வியாழன் மார்ச் 14, 2019

91 வயதுடைய கம்போடியாவை சேர்ந்த பௌத்த பிக்குவான சம்பிரான் நெட்  என்பவர் சிவனொளிபாதமலைக்கு சென்ற நிலையில் ஏற்பட்ட மார்பு வலியின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

அவர் கடந்த 10 திகதி சிவனொளிபாதமலையில் தரிசனம் செய்து விட்டு வந்த நிலையில் ஏற்பட்ட திடீர் மார்பு வலியினால் இவர் நல்லதண்ணியில் உள்ள அவசரசிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்ட பின் அவர் மேலதிக சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேலும் மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி லியத்தபிட்டிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரை மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில; சிகிச்சை பலனின்றி இன்று மரணித்துள்ளார் என வைத்திய அதிகாரி அவர்கள் தெரிவித்தார்.