சஜித்பிறேமதாசாவின் நிலைப்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை

திங்கள் ஜூலை 18, 2022

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக மாநாடு இன்று கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் கொழும்பிலுள்ளஅவரது இல்லத்தில் இடம்பெற்றது.  கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள சனாதிபதி தெரிவு தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. 

சஜித் பிறேமதாசா மற்றும் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான இயங்கும்  தேசிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு தரப்பினரிடமும் ஒற்றையாட்சி முறைமையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பை கொண்டுவரும் சிந்தனை அவர்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ரணில் விக்கிரமசிங்க தம்முடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும் எனினும் அவரைச் சந்திக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்..