சகல விமான நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடை நிறுத்திய துபாய்!

புதன் அக்டோபர் 07, 2020

எதிர்பாராத கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான சகல விமான நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்ல எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எங்கள் மக்களுக்கு, விமான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் வரை பொறுமையாக இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.இது தொடர்பான செயல்முறை குறித்து உரிய நேரத்தில் நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம் என்றும் துதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.