சம்மாந்துறையில் பிரித்தானியா தயாரிப்பு துப்பாக்கி மீட்பு!

புதன் செப்டம்பர் 23, 2020

அம்பாறை சம்மாந்துறை காவல் துறை  பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பிரிவிலுள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றில் நிலத்தில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் பிரித்தானிய தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை (22) விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக சம்மாந்துறை காவல் துறையினர் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ரத்னமல தலைமையிலான விசேட அதிரடிப்படையினர்குறித்த காணியில் பக்கோ இயந்திரம் கொண்டு நிலத்தை தோண்டிய போது நிலத்தில் உரைப்பையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பிரித்தானிய  தயாரிப்பு சொட்கண் ரக துப்பாக்கி ஒன்று, 6 துப்பாக்கிரவைகள், கத்தி ஒன்று ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவற்றை சம்மாந்துறை காவல் துறை  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்தனர்.