சமூக இடைவெளி ஏற்படுத்தும் கருவி!

ஞாயிறு மே 10, 2020

பொது இடங்களில் கூடுவோர், சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்வது அடுத்து வரும் மாதங்களில் பெரிய சவாலாக இருக்கப்போகிறது.இதற்கு உதவ,'எவலான்'என்ற ஐரோப்பிய நிறுவனம்,'ஸ்மார்ட் ஈகிள்'என்ற உணரிக் கருவியை தயாரித்துள்ளது.

இதை பலரும் கூடும் இடங்களில் பொருத்திவிட்டால், அந்த அறையில் எத்தனை பேர் இருக்கின்றனர், அவர்களில் சமூக இடைவெளிக்குத் தேவையான 1.4 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்காதோர் யார் என்பதை உணரி கண்டுபிடித்துவிடும்.

பிறகு,நொடியில் அந்த நபர்களின் மொபைல்களுக்கு குறுஞ்செய்தி பறக்கும்.மொபைலில் உள்ள தனி நபர் தகவல்கள் எதையும் இந்தக் கருவி சேமிக்காது என்பதால், அந்தரங்க அத்துமீறல் எதுவும் ஸ்மார்ட் ஈகிள் கருவியால் ஏற்படாது.

ரயில்,பஸ்,மால்கள்,சினிமா அரங்குகளுக்கு சில வாரங்களில் இயங்க அனுமதி கிடைத்துவிடும் என்கிற நிலையில்,ஸ்மார்ட் ஈகிள் போன்ற உணரிகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.