சர்­வ­தேச கடல் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்!

திங்கள் அக்டோபர் 21, 2019

பாது­காப்பு அமைச்சின் மேற்­பார்­வையின் கீழ் இலங்கை கடற்­படை தொடர்ந்து பத்­தா­வது தட­வை­யா­கவும் ஏற்­பாடு செய்­துள்ள காலி கலந்­து­ரை­யாடல் 2019 சர்­வ­தேச கடல் மாநாடு இன்று கொழும்பு காலிமுகத்­திடல் ஹோட்­டலில் இடம்­பெ­ற­வுள்­ளது.

55 நாடு­களின் 12 சர்­வ­தேச அமைப்­பு­களின் மற்றும் 03 பாது­காப்பு துறை பொருட்கள் தொடர்­பு­டைய நிறு­வ­னங்­களின் உள்ளூர் மற்றும் வெளி­நாட்டு பிர­தி­நி­திகள் கடல் பாது­காப்பு நிபு­ணர்­களின் பங்­கேற்­புடன் 'ஒரு புதிய சிந்­த­னை­யுடன் தசாப்­தத்தின் மீளாய்வு' என்ற கருப்­பொ­ருளின் கீழ் இன்றும் நாளையும் இம்­மா­நாடு நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த பத்து ஆண்­டு­களில் ஒவ்­வொரு பங்­கு­தா­ரரும் தனிப்­பட்ட தேசத்தின் நல­னுக்­கேற்ப பல்­வேறு வகை­யான கடற்­ப­ரப்பின் பொது­வான நன்­மைக்கு பங்­க­ளித்­தனர்.


இந்த பங்­க­ளிப்­புகள் அனை­வ­ருக்கும் கடல்­களைப் பாது­காப்­பாக மாற்­று­வ­தற்­காக ஒரு­வ­ருக்­கொ­ருவர் பின்­னோக்கிப் பகுப்­பாய்வு செய்­வதன் மூலம் கற்­றுக்­கொள்ள வாய்ப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதன்­படி, புதிய மிலே­னி­யத்தின் மூன்றாம் தசாப்­தத்­திற்கு அவர்கள் தயா­ராகும்போது கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் அனைத்து பங்­கு­தா­ரர்­க­ளுக்கும் பரிந்­து­ரை­க­ளுடன் வழக்கு ஆய்­வுகள் இந்த மாநாடு முன்­வைக்கும்.

மேலும் இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்தின் நல்­வாழ்­வுக்­கான அச்­சு­றுத்­தல்­களைத் தணிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஒவ்வொரு பங்குதாரரும் எவ்வாறு எதிர்கொண்டார்கள் மற்றும் செயற்படுத்தினர் என்பதற்கான பிரதிபலிப்பாகவும் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.